13 June 2013

மௌனம பேசும் வார்த்தை

96. உன் இதழ்கள் பேசும் வார்த்தைகளுக்கு
மரணம் உண்டு...
உன் மௌனம பேசும் வார்த்தைகளுக்கு
என்றுமே மரணம் இல்லை....

97. என் விரல்களுக்கு வார்த்தைகளை
கவிதையாக சொல்லித்தந்தது
உன் காதல் தான்..!


98. அழகென்று ஒன்றை மட்டும் நினைக்கின்றேன்
அது தான் உன் அன்பான உள்ளம்...!

99. எனக்கு இதயம் இருப்பதை அறிந்ததே உன் நட்பால் தான் நண்பா...

100. இருளான மேகத்திற்கு வெண்ணிலவு துணை
என் இருளான வாழ்க்கைக்கு பெண்ணிலவு தான் துணை...!



101. உனது வாசகங்கள் என்னை வேகமாக கொன்று விடுமோ....
பார்ப்போம்
அதுவும் இன்பமான மரணம் தான்....


102. உனது ரணமான வார்த்தையைவிட
இதழ் பூட்டிய மௌனத்தால் தான் வலி அதிகம்.....

103. அளவுகோலும் அழ ஆரம்பித்துவிட்டது....
அவளது நீளமான காதலை என்னிடம்
அளக்க முடியாமல் போனதால்....

104. கண்களுக்கு மட்டும் பாதிப்பல்ல...
அவளை காண்பதால்
இதயத்திற்க்கும் இழப்பு அதிகம் தான்...


105. இரவில் வரும் வெண்ணிலவே
உன்னைவிட ஒரு பெண்ணிலவை
காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்...
அவளிடம் காதல் சொல்லும் அந்நாள்
பௌர்ணமியா??? அமாவாசையா???

106. வானத்திற்க்கும் நண்பனாக நட்சத்திரமும்
காதலியாக வெண்ணிலவும் உண்டு....
 

உதடுகள் தைக்கப்படுகின்றன

86. தோல்வி காணாத நட்பும் உண்டு
வெற்றி காணாத காதலும் உண்டு...
இது இரண்டிலும் தான் அனைவரும் வாழ்கிறோம்....!

87. தேடும் உயிர் கிடைத்துவிட்டால் சுகம் தான் என்னுள்...
தேடியும் உயிர் கிடைக்காவிட்டால் சோகம் தான் என்னுள்....!

88. தூரமென்று நினைத்ததில்லை
பிடித்த நீ தூரத்தில் இருக்கும் போது
தூரமென்று நினைக்கின்றேன்
பிடிக்காத உன் அருகில் இருப்பதை...!

89. உன் சிரிக்காத உதடுகளை சிரிக்க வைக்க
உன் உள்ளத்தில் இருப்பவர்களால் மட்டுமே முடியுமடி...!



90. நீண்ட நொடிகள் பேசவில்லை உன்னோடு
ஆனால்
நீண்ட நாட்களாக வாழ்கிறாய் என்னுள்
அன்பாக...!


91. உனது உதடுகள் தைக்கப்படுகின்றன
உன் உள்ளத்தால்,
என்னிடம் உண்மை பேசும் நேரங்களில்....


92. உண்மையான் அன்புக்கு மரணம் கிடையாது
போலியான அன்புக்கு ஆயுள் கிடையாது.....

93. மணிக்கொழுசு அணியவில்லை,
அருகில் அவனது உதடுகள் பேசுவதால்....
அவனது உதட்டின் ஓசையை விடவா
கொழுசுகள் பேச முடியும் என்னிடம்....

94. நட்சத்திரங்கள் உதவியோடு
வெண்ணிலா மின்னலைவிட
மின்னுகிறது வானில்...
யாரை காதலனாக்கவோ???

95. உன்விரல் எழுதும் கவிதையை காகிதம் காதலிக்கும்
உன் விழி எழுதும் கவிதயை நான் காதலிப்பேன்...