13 November 2013

அழகாய் வாழ்வோமே

வனவாசத்தில் இராமன் வாழ்ந்த ஆண்டுகளை தாண்டியது நாம் கல்விகூடத்தில் கல்விபயிலவந்த ஆண்டுகள்..............
கல்விதகுதி வாங்கிதராத வேலையை,
மற்றவர்களின் அனுபவவாசத்தால் வாங்கிகொண்டு வீடு திரும்புகிறோம் இது இன்றைய பட்டதாரிகளின் வாழ்க்கை..........
மனிதர்களை சார்ந்துவாழும் நரகவாசியாக வாழ்வதைவிட,
மரங்களை
சார்ந்துவாழும் வனவாழ்க்கையே மேலானது............
************
ஆயிரக்கணக்கான இன்பங்களை தாங்கும் இதயம்
ஒற்றை துன்பத்தால் தூங்குவதில்லை.......
காரணம்,
கனமில்லா உள்ளமில்லை கனமான வலிகள்.....
***********
பலநாட்களாக சேர்த்த நற்பெயரை
ஒருநொடியில் செய்த தூயமில்லாசெயல் சிதறடித்துவிடும்........
நொடிபொழுதுகூட உன்நிலையில் இருந்து தவறிவிடாதே
தவறினால், சேகரித்தஎதுவும் நம்வசம் வாழ்வதில்லை..
************
பழகியபின் விலகிநின்றுபார் உயிர்பையில் நீ
தந்துபோன தவிப்பால், கண்இமைகள் கண்ணீரில் நீராடிநிற்கின்றன
வலித்தாலும் இனிக்கும் தருணமது........
************
நாவிடம் துன்பம்தரும் வார்த்தைகள் தூங்கிவிட்டால், யார்மனதிலும் துக்கம் எழுவதில்லை.....
***********
சிந்தும் கண்ணீர் சீக்கிரம் கண்களைவிட்டு மறைந்துவிடும்
ஆனால்
கண்ணீருக்கான காரணம் என்றும் மனதைவிட்டு
மறைவதில்லை....
*********
கோபங்களை இதயத்தில் தேக்கிவைத்தால், இதயத்தையும்
பாதிக்கும்
இதயத்தில் இருப்பவரையும்
பாதிக்கும்...
**********
இதயம் இருப்பது தெரியாமல் வாழ்ந்திருக்கிறேன் இத்தனை நாட்களாக,
நீ தங்கிய பிறகு உணர்கிறேன் துடிக்கும் இதயத்தை .....
உறங்கிய இதயம் தூக்கம்கலைத்தது உன்வருகையால்..
*********
தோல்வியை சூடியவன் விடாமுயற்சியோடு வெற்றிக்கான பாதையை தேடுவான் இது தோல்வியில் பயின்றது....
வெற்றிவாகை சூடியவன் அடுத்தநிலை தேடாமல் கிடைத்தவெற்றியோடு அடைபட்டுவிடுவான் இது வெற்றியில் பயின்றது....
**********
வாழ்வது ஒருநாளானாலும் ஈசல்
இன்பம்காணாமல் இறப்பதில்லையே.........
மரணம்வரும் நேரம் தெரியாத நாமும் மீதிஇருக்கும் ஆயுளையாவது அழகாய் வாழ்வோமே....
--------------------
 
 
 
 
 
 
 
 
 

இதயம் இடிபாடுகளில் வாழ்வதால்தான்

தனக்குள் தவிப்புகள் இருந்தாலும் தட்டிஎழுப்பாமல் கட்டிவைக்கும் பெண்களின் மனகட்டுபாடுகளால் இதயம் இடிபாடுகளில் வாழ்கிறது அவளதுஇதயம் இடிபாடுகளில்
வாழ்வதால்தான் சுதந்திரமாக தெரிகிறது என்வாழ்நாட்கள்......
கடைசிவரை
அவளது கண்பார்வைகூட தவிப்புகளை
கசியவில்லை.........
*********
உன் நிழலும் நினைவும் என்னை துரத்தி வராதபோதுதான் தனிமையும் என்மீதுஇனிமை தூவுகிறது.........
**********
கற்பனைவீட்டிற்குள் கடத்திவந்தேன் அவளை பாதசுவடுகளை பதியாமல்கூட பறந்துவிட்டால் என்கற்பனைவீட்டைவிட்டு .....
*********
மொட்டுகள் இல்லாத செடியோடு காற்றுபேசி பயனில்லை அதைபோல
உன்அன்பு இல்லாத உள்ளத்தோடு நேசமாக உரையாடுவதும் பயனற்றது..........
********
வெளிவிடாமல் மூடிவைக்கப்படும் மலரின் வாசமும்,மனதின் நேசமும் மற்றவர்களால் நுகரமுடிவதில்லை........
**********
இறந்தபிறகும் மண்ணுள் புதைக்கபடாத உதிர்ந்தஇலைபோல்,
மறந்தபிறகும் உன்னுள் மறைந்துபோகாமல் வாழ்கிறேன் உதிராதநினைவுகளால்....
************
உன்விழிகள் அளித்த சிபாரிசின் பேரில்,
உன்இதயத்தை தேர்வுசெய்தேன்
காதலை
சேகரித்துவைத்து செலவிட.......
**********
கண்அயர்ந்து உறங்கும் கதிரவன் மறுபடியும் கண்திறக்கும்வரை,
இரவுக்கு பணிபுரிய வருகிறாள்
நிலவுதேவதை........
*********
மற்றவர்மீது நாம் அள்ளிதெளிக்கும் அன்பின் வாசத்தைவிட
நம்மீது மற்றவர் அள்ளிதெளிக்கும்
அன்பின் வாசம்
வசியபடுத்தும் நம்மை....
********
உனக்கு எதிரியாக
நீயே இருந்தால், வீழ்த்துவது கடினம்......
*********
சிலநொடிகளில் செத்துபோகும் உன்சினங்களால்,
உன்னோடு
உடன்பிறந்த உன்குணங்கள் சாகடிக்கபடுகிறது........
*********
உன்னை என்னுள் தேடிகொண்டே
தெரிந்ததால்,
என்னிடமே நான் தொலைந்துநிற்கிறேன்....
********
நம்மிடையே அன்பின் அடையாளம் தொலையாதவரை, பிரிவென்பதும்
நம் பின் தொடருமே
தவிர
நம்மிடையில் வருவதில்லை.....
***********
அவளது கருவிழிகளை
கட்டிதழுவும் எந்தன்
கவிதைஅலைகளின் போராட்டம் என்றும் முடிவுபெற விரும்பவில்லை........
------------------------
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மண்காகிதத்தில்

அலையிடம் நடனம் பயில்வோம்
காற்றிடம் கதை பயில்வோம்
மழலையிடம் சிரிக்க பயில்வோம்
மெழுகிடம் தியாகம்
பயில்வோம்
பறவைசிறகிடம் உயரம்
பயில்வோம்
கிளியிடம் பேச
பயில்வோம்
மழைத்துளியிடம் விளையாட பயில்வோம்
அன்னையிடம் அன்பை பயில்வோம்
வானவில்லிடம் வளைந்துகொடுக்க பயில்வோம்
இயற்கையிடம் கல்வி
பயில்வோம்.....
*******
கர்வம் கற்றுதரும் வெற்றியைவிட
காயங்கள் கற்றுதரும்
தோல்வி சிறந்தது....
********
என் வாழ்விற்கு திருப்பம் வரஆரம்பித்ததே நீ என்னை திரும்பிபார்த்த நாள்முதல் தான்........
விடியல்கண்ட பகல் இரவாய் ஆனதும் அன்றுதான்........
*********
என்பேனா கவிதை பெண்ணே உனக்காக பேசும்நேரத்தில் மட்டும்
கற்பனையை கழற்றி வைத்துவிட்டு உண்மையை
பேசுகின்றன...
*********
நடைபயின்ற வாழ்நாட்கள்
நீ என்னுள் நுழைந்த நொடிமுதல்,
வேகத்தோடு
ஓடி கரைகின்றன......
**********
விடுமுறை இல்லாத உன்நினைவுகள் விடுவதில்லை என்னை....
********
பிரியநினைக்கும் உன்னிடம்
பிரியமாக இருக்கநினைக்கிறது இதயம்.......
*********
எதற்காகவும் கண்ணீர்சிந்தாத
மலராவோம்.....
எல்லோரையும்
நேசிக்கும்
காற்றாவோம்....
எப்போதும்
துன்பத்தில் தூங்காத மெழுகாவோம்....
**********
மழைத்துளியின் காலடிபட்டு காற்றோடுகலந்துவரும் மண்ணின்வாசனை போல் எந்த மலரும் வாசனைவரம் வாங்கிவரவில்லை.....
***********
தரையில் தவழும் மழைத்துளி மண்காகிதத்தில்
கவிதை எழுதுகிறது....
கம்பிகளில் கோர்த்துநிற்கும் தரைவிழாத மழைத்துளி மனகாகிதத்தில்
கவிதை எழுதுகிறது....
***********
என் கனவுச்சாலைமீது உன்பாதம் பட்டபோது பதறிஎழுந்தேன் பாதிகனவில் பயங்கர கனவென்று......
 
 
 
 
 
 
 
 
 
 

பேனாஇல்லா கவிஞன்

நீர் பட்டால்
அணையும்
எரியும் நெருப்பு....
பெண்பூவே நீ பட்டுபோனாலும் அணையாது உன்னால் எரியும் நினைப்பு...
*********
அலையிடம் நடனம் பயில்வோம்
காற்றிடம் கதை பயில்வோம்
மழலையிடம் சிரிக்க பயில்வோம்
மெழுகிடம் தியாகம்
பயில்வோம்
பறவைசிறகிடம் உயரம்
பயில்வோம்
கிளியிடம் பேச
பயில்வோம்
மழைத்துளியிடம் விளையாட பயில்வோம்
அன்னையிடம் அன்பை பயில்வோம்
வானவில்லிடம் வளைந்துகொடுக்க பயில்வோம்
இயற்கையிடம் கல்வி
பயில்வோம்.....
*********
கால்கள்இல்லாதபோதும் வட்டவடிவில் விழாமல் நிற்கும்வான்நிலா,
புள்ளிவடிவில் பூத்துகிடக்கும்விண்மீன்,
அலைகோடுவடிவில் அழகானமின்னல்,
அரைவட்டவடிவில் வண்ணங்களின் வரைபடம் வரையும் வானவில்,
நேர்கோடுவடிவில் நெளியாமல் மண்தொடும் மழைத்துளி.......
வடிவங்களும்,
வண்ணங்களும் படித்தேன் வானிடம்.......
********
என் வாழ்விற்கு திருப்பம் வரஆரம்பித்ததே நீ என்னை திரும்பிபார்த்த நாள்முதல் தான்........
விடியல்கண்ட பகல் இரவாய் ஆனதும் அன்றுதான்....
********
கர்வம் கற்றுதரும் வெற்றியைவிட
காயங்கள் கற்றுதரும்
தோல்வி சிறந்தது....
*********
என்பேனா கவிதை பெண்ணே உனக்காக பேசும்நேரத்தில் மட்டும்
கற்பனையை கழற்றி வைத்துவிட்டு உண்மையை
பேசுகின்றன...
*********
இதயக்கண்ணாடியில் என்னுயிர் உடைந்துபோனாலும் உனது பிம்பம்மட்டும் உடைவதும் இல்லை உதிர்வதும் இல்லை பிரிவதும் இல்லை......
**********
கண்இமைகளின் திறப்புவிழா விடியல்...
கதிரவன் விழிதிறக்கும்விழா விடியல்...
இரவுபோர்வைக்குள் ஒளிபுகும்விழா
விடியல்...
***********
மாலையில் கசியும்
மேகம்
மின்னலில் கண்ணடிக்கும் வானம்
இடியில் கர்ஜிக்கும் ஆகாயம்
இரவில் காலில்லாமல் ஊர்வலம்வரும் நிலவுதேவதை
தூரலில் கவிதைவடிக்கும்
பேனாஇல்லா கவிஞன்....
***********
அவளது மடிக்குள் மடங்கும் மழலையாக மலர்ந்தபோது துன்பங்களை காணவில்லை...
அவளது உயரம்தாண்டி பூத்துநிற்கும்போது இன்பங்களை காணவில்லை...
*********
முகத்தை பார்வையிட்டபின் வருவது காதல்
இதயத்தை
பார்வையிட்டபின் வருவது நட்பு
முகமும்,அகமும் பாராமல்
படர்வது
அன்னையின் அன்பு மட்டுமே....
*********
தலைகோதும் விரல்கள்,
அன்பைவெளிப்படுத்தும் முத்தங்கள்,
எட்டிஉதைத்தும் சிரிக்கும் இதழ்கள்,
தொட்டில் இல்லாமல் உறங்கும்
மடியின் தாலாட்டுகள்,
இரவிலும் அரவணைக்கும் கரங்கள்,
வலியை சொல்லதெரியாமல் வலியால்துடிக்கும்போது கண்ணீர்கசியும் இதயம்...
---------------------
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிச்ச விளக்குகள்

நழுவாத உன்
நினைவுகள்
வலிக்காத உன்
காயங்கள்
வாடாத உன்
வாசங்கள்
மறையாத உன்
நேசங்கள்
காணாத உன்
மாற்றங்கள்
இதழ்திறக்காத உன் பேச்சுகள்
பூக்காத உன்
புன்னகைகள்
அகலாத உன்
ஸ்பரிசங்கள்
இதெல்லாம் தேடி அலைந்து
தூங்காத நம்
இதயங்கள்.......
******
என் கவிதையின்
கற்பனை உயரம்
கன்னியே! உன்னை கண்டவுடன் கண்டறிந்தேன்...
********
குடைக்குள் மழை வரநினைப்பது போல
உனக்குள் நான் வரநினைக்கிறேன்...
********
உன்னிடம்
தொலைந்துபோன
என்னைவிட
என்னிடம்
படிந்துபோன
உன்னை
தேடிஅலைகிறேனடி...
********
கல் உறங்கினால்
பாறை
சொல் உறங்கினால் மௌனம்
இமை உறங்கினால் உறக்கம்
இதயம் உறங்கினால் மரணம்
புன்னகை உறங்கினால் துன்பம்
கண்ணீர் உறங்கினால் இன்பம்
கனவுகள் உறங்கினால் காலை
கதிரவன் உறங்கினால் மாலை
கர்வம் உறங்கினால்
வெற்றி
முயற்சிகள் உறங்கினால் தோல்வி
நிலவு உறங்கினால்
பகல்
ஆதவன் உறங்கினால் இரவு
******
உடலைவிட்டு உயிர்மூச்சு ஓடுவது உலகம் காணும் இறப்பு
என்னைவிட்டு உன்மூச்சு
ஓடுவது நான் காணும்
இறப்பு
********
இளம்இதயத்தை கவிதை எழுத உன் கண்பார்வை தூண்டியது... காதல்உலகம் கூட்டிசென்றது உன் இதயகால்கள்....
உன்னை உள்ளே வைத்து இதயகதவுகளை பூட்டிசென்றது உன் இதழ் திறந்தபுன்னகை....
என் இதயவானில் என்றும் மறையாத பெண்ணிலவும் நீதான்....
**********
அருகில் வசப்படாத எதுவும் தேவையில் அடங்கும்
தேவையில் வசப்படாத எதுவும் தேடலில் அடங்கும்
தேடலில் வசப்படாத எதுவும் இதயத்தில் அடங்கும்
**********
நிலா உறங்கும் பகல்வேளையில் பக்கத்தில் நின்று வெளிச்சவிளக்குகள் ஏற்றுகிறாய்
நிலவுக்கு பதில்.....
கதிரவன் உறங்கும் இரவுவேளையில்
கனவில் நின்று
எரிகிறாய் என்னுள்
கதிரவனுக்கு பதில்....
-----------------------
 
 
 
 
 
 
 

உயிர்கொல்லியானாவள்

இறப்புக்காக வாழ்பவன் மனிதனல்ல
மற்றவர்க்காக வாழ்பவனே மனிதன்.....
*********
கஷ்டம் கடந்து
செல்....
இஷ்டம் கடந்து செல்லாதே....
**********
பொருள்தராத வரிகள் கவிதை ஆவதில்லை
நீ இல்லாத கவிதைகள் பொருள்தருவதில்லை..
*********
தண்ணீரில்
வாழ்ந்தாலும் இறப்பதில்லை தாமரை
முட்களோடு
வாழ்ந்தாலும்
மடிவதில்லை மலர்
காயங்களோடு வாழ்ந்தாலும் கரைவதில்லை காதல்
சரிவுகளோடு
வாழ்ந்தாலும்
சாய்வதில்லை மலை
நிஜத்தோடு
வாழ்ந்தாலும்
நிற்பதில்லை நிழல்
இன்பங்களோடு வாழ்ந்தாலும் தூங்குவதில்லை துன்பம்
கஷ்டங்களோடு வாழ்ந்தாலும் கைவிடுவதில்லை கள்ளமில்லா நட்பு......
**********
பதிலுக்காக கேள்வி வாழலாம்
வெற்றிக்காக தோல்வி வாழலாம்
பார்வைக்காக கண்கள் வாழலாம்
பருவபெண்ணுக்காக காதல்
வாழலாம்
உனக்காக கவிதைகள் வாழலாம்
கவிதைக்காக நானும் வாழலாம்
அன்பிற்காக அனைவரும் வாழலாம்......
*********
பாஷைகள் தேவையில்லை பாசம்பேச
நேரங்கள்
தேவையில்லை நேசம்பேச
கரங்கள் தேவையில்லை கவிதைபேச
இனங்கள் தேவையில்லை
இன்பம்பேச
இதழ்கள் தேவையில்லை
இவையெல்லாம்பேச...
**********
வானவில் வண்ணங்களையும் தாண்டிவிட்டது என்னவளின்
எண்ணத்தின்
வண்ணம்......
*********
விழுந்தாலும் எழுந்துஓடும்
அருவியும்,
கடலைகண்டாலும் ஓயாதஅலையின் வேகமும்
போல
தோல்வியில் விழுந்தாலும்
எழுந்துஓடுபவன்
வெற்றியைகண்டாலும் ஓயக்கூடாது....
ஓயாதவன் செதுக்கபடுகிறான்
ஓய்வெடுப்பவன்
ஒதுக்கபடுகிறான்....
***************
உயிரினுள் உறைந்திருப்பவள் உருகும்நேரத்தில் உயிர்கொல்லியானாவள்.....
**************
 
 
 
 
 
 
 
 
 
 

கண்பார்வையில் நனையவைப்பாள்

செதுக்கிய சிற்பங்களை அடுக்காக தூக்கி சுமக்கும் கோபுரத்தின் உயரம்தாண்டி வளர்ந்து நிற்கிறது, ஒற்றை சிற்பமாக பெண்ணே! உன்னை தேக்கி வைத்திருக்கும் எந்தன் மனக்கோபுரம்....
**************
பட்டுபோன இலை
பழைய நிலைக்கு போகமுடியாததை போல,
இறந்தகாலம் இயல்புநிலைக்கு வரமுடியாது.....
நிலையான ஒன்று நிகழ்காலம் மட்டுமே....
****************
இதுவரை விழிகாணாத விண்மீன்மழை வான்திறந்து விழுகிறது என்னருகில்
அவள் விழிதிறந்து ஜாடை பேசுகையில்....
***************
காற்றுக்கு திசை கற்றுதரமுடியுமா?
நெளியும் அலையை நேராகநிற்க சொல்லமுடியுமா?
பெண்ணிலவு பின்னால்ஓடும் வெண்ணிலவை கட்டிவைக்கமுடியுமா?
ஆகாயதோட்டத்தில் பூத்துகிடக்கும் விண்மீன் உதிர்ந்துவிழமுடியுமா?
இவையெல்லாம் நிகழாததுபோல
என்னவளையும் மறந்துவாழ்வது நிகழாத ஒன்று....
***************
கண்ணீர்வடிக்காத மலர், மண்மடிசாய்ந்து மரணம்தேடும் போதுதான் சிரிக்கும் மலருக்கும் ஜீவன்உண்டென
புரிந்து சிலிர்த்தேன்.....
**************
பருவபதுமையே!
உன் அசைவுகளை ரசித்து பருகிய என் கவிதை,
என்றுமே உன்னை மட்டுமே பொருளாக தூக்கிசுமக்குமடி.....
***************
அலையின் சத்தம் கரையின் காதுகளுக்கு
எட்டியும்
அமைதி நிலவுவது போல
கண்களின் காதல்சத்தம்
இதயம் எட்டியும்
மௌனம் தெரிப்பது
ஏனோ....
***************
விழியில் பதிந்த உன்பிம்பம்
பார்வை முதிர்ந்தாலும் விழுவதில்லை...
***************
ஆரம்பத்தில் கண்பார்வையில் நனையவைப்பாள்
கடைசியில்
கண்ணீரில் நனையவைப்பாள்.....
***************** 
இமைகதவுகள் பூட்டபட்டபின்பு கனவாக வருவாள்
இதயகதவுகள்
பூட்டபட்டபின்பு நினைவாக
வருவாள்....
******************
மரணதுயில்களைத்த, அன்பினைபேசும்
உன்துளிகண்ணீர்கூட
எந்தன் மரணத்தையும் மறு ஜனனமாக்கும்.....
*******************
பேனா பேசுகையில் புரிகிறது உன்விரலும்
இதழென
கவிதை பேசுகையில் புரிகிறது உன்கண்ணிமையும் இதழென
காற்றோடு பேசுகையில் புரிகிறது உன்கருங்கூந்தலும்
இதழென
புன்னகை பேசுகையில் புரிகிறது உன்உதடுதான் உண்மையான இதழென இத்தனை இதழ் உன்னிடம் இருந்தும் என்காதலை எதுவுமே பேசாததுஏனோ..
*******************
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இமைக் கதவுகளை தட்டும் நேரம்

இமைகள் கைகோர்க்கும் நேரம் இரவு....
விழிகள் விரியும்
நேரம் விடியல்....
கனவுகள்
இமைக்கதவுகளை தட்டும்நேரம் இரவு....
கதிரவனின் கைகள் இமைக்கதவுகளை
தட்டும்நேரம் காலை....
கதிரவன் கண்கள்மூடி
மேற்கில் உறங்கசெல்லும் பொழுது மாலை....
நிலவு விழிபூட்டி மேகத்தினுள் உறங்கசொல்லும்
பொழுது காலை....
************
காற்றின் கைகளை கைபற்றிவைத்தாலும் விழிநழுவி விடைபெறும் எதிர்பாராத நொடியில் என்னைவிட்டு பெண்காற்றே உன்னை போல....
***************
மோதாமல் அலைவந்து கரையை பார்த்தால் அலையின் காதலை கரை அறியுமா?.....
உதடுகள்தாண்டி உரைக்கப்படும் அன்புமட்டுமே
பார்வையை உரசும்....
உள்ளம்தாண்டாமல் புதைக்கப்படும் அன்பு பார்வையில் புலப்படுவதில்லை....
******************
பெண்ணே! உன் விழிமூடாமல் பேசிய வார்த்தைகளால், முடிவிலியாய் பேசுகிறாய் என்னோடு......
***************
மண்பார்த்து மழைதூரவரும் மேகம் காற்றுபட்டு களைவதுபோல,
பெண்பார்த்து
காதல்சொல்லவரும் மனம்
அவள் கண்களைபார்த்ததும் களைவது ஏனோ....
*****************
அதிகம் விரும்புவதை விட்டுகொடுக்க நினைக்காதே....
விட்டுகொடுக்க நினைப்பதை அதிகமாக விரும்பாதே....
******************
கனியின் கண்படாமல் மண்ணுள் மறைந்து வாழ்வது வேரின் வாழ்க்கை...
உயிர்தந்த வேரின் முகம் பாராமல் உதிர்வது மலரின் வாழ்க்கை...
ஒரே மரத்தின்,
பாதத்தில் விரிந்த வேருக்கும்,உச்சிமேல் பூத்த மலருக்கும் வாழ்வியல் வேறுபாடு ஆச்சரியக்குறியிடுகிறது அனைத்து உள்ளத்திலும்...
***************
இமைகள் பிரியா கண்கள் வெளிச்சம் அறிவதில்லை
சிறகுகள் பிரியா பறவை உயரம் அறிவதில்லை
தனித்து வாழும் உறவுகள் ஏமாற்றம் அறிவதில்லை
தனித்து இயங்கு
துணை தேடாதே......
***************
 
 
 
 
 
 
 
 

தோல்வி இறந்தது

தடைகளை தாண்டாமல் பெறுவது
வெற்றியாகாது
சிறையை தாண்டாமல் பெறுவது தண்டனையாகாது
காயங்களை தாண்டாமல் பெறுவது
காதலாகாது....
*************
கண்ணங்களுக்கு புன்னகை சொல்லிதந்தாய்
கண்ணீர் இறந்தது...
வாழ்விற்கு நம்பிக்கை சொல்லிதந்தாய்
தோல்வி இறந்தது...
**************
கடல் அழகாவது அலையாலே
மரம் அழகாவது
மலராலே
கவிதை அழகாவது கற்பனையாலே
காதல் அழகாவது
கன்னியாலே
நட்பு அழகாவது
நண்பனாலே
காற்று அழகாவது மோதலலாலே
அருவி அழகாவது அசைவுகளாலே
அன்பு அழகாவது அம்மாவாலே
ஆகாயம் அழகாவது
இரவாலே
வாழ்க்கை அழகாவது
நம்பிக்கையாலே
உள்ளம் அழகாவது உண்மையாலே
மழலை அழகாவது
குறும்புகளாலே
என்அருகாமை அழகாவது
பெண்ணே உன்னாலே....
**************
சிரிக்கும் அலை சீற்றம்
கொள்ளாதவரை அழகு
நீச்சலாடும் உன்நினைவுகள் நிற்காதவரை அழகு.....
****************
விலக நினைப்பவரை விரும்ப நினைக்காதே
விரும்ப நினைப்பவரிடம் விலக நினைக்காதே....
**************
பனி ஈரங்களை
மலர் அறியும்
மேக ஈரங்களை
மண் அறியும்
கண்ணீர் ஈரங்களை
கண்ணம் அறியும்
கன்னியின்
நினைவு ஈரங்களை
இதயம் அறியும்
கடலின்
நாண ஈரங்களை
கரை அறியும்....
******************
கண்ணத்தில்
முத்தகவிதை எழுதினாள்
அருகாமையில் நாணகவிதை எழுதினாள்
இருவிழியால் கனவுகவிதை எழுதினாள்
கண்ணீரால்
துன்பகவிதை எழுதினாள்
புன்னகையால்
இசைகவிதை எழுதினாள் இதயத்தால்
காதல்கவிதை எழுதினாள்
அவளது அசைவுகளை எழுத மொழி
தேவையில்லை
ரசிக்க விழி மட்டும் போதும்......
********************
 
 
 
 
 

தினங்கள் தீக்குளிக்கும்

பகலில் பிறக்கும் நிலவு
பார்வையில் பிறக்கவில்லை...
இரவில் எரியும் விண்மீன்
பார்வையை
எரிக்கவில்லை...
பின்தொடரும் பிள்ளைநிலா
பார்வையில்
படரவரவில்லை...
****************
ஜன்னல்வழியாக பார்த்தால்தான் நீராடாதநிலா அழகு...
கண்வழியாக கண்டால்தான்
விழியில்ஆடும்நீ அழகு...
உன்னைதழுவி பிறந்தால்தான் காகிதகவிதை அழகு...
******************
கண்ணீர்
விழவைப்பவனை விட
கண்ணீர் நிற்கவைப்பவனை நிறுத்தாமல் நேசி.....
******************
வாக்களித்தபின் மறந்துபோவது
அரசியல்வாதி மட்டுமல்ல அரசியே நீயும்தான்டி...
***************
சித்திரமாக நீ
நின்றால் என்இதயமும் கற்சுவர்தானடி
பூவாக நீ உதிர்ந்து விழுந்தால் என்நெஞ்சமும்
பாறையாகுமடி
மழையாக நீ நனைக்க வந்தால் என்மனமும் மண்ணாகுமடி
அலையாக நீ அணைக்க நினைத்தால் என்உள்ளமும்
கரையாகஉறையுமடி....
***************
உன் அருகாமையில் உறையும் போது,
கிழமைகள் கிடந்து உருளும்
நாட்கள் நடந்து
செல்லும்
வாரங்கள் வளர்ந்து
நிற்கும்
வருடங்கள் வாழ
அடம்பிடிக்கும்....
உன் அருகாமை உருகும்போது,
தினங்கள் தீக்குளிக்கும்
வாரங்கள் சோகமாகும்
வருடங்கள் யுகமாகும்....
****************
கேட்காமல்
தீண்டுவதுதான்
காற்றும்,காதலும்
சொல்லிதராமல்
வருவதுதான்
அன்பும்,அக்கறையும்
படிக்காமல்
புரிவதுதான்
பாசமும்,நேசமும்....
****************
 
 
 
 
 
 
 

பொழுதுகளும் பழுதடைந்தன

இதயத்தில்
நல்லெண்ணங்களை தெளித்து,
அன்பை வரவேற்த்து,
யோசனைகளுக்கு வாசனைதடவி, காயங்களை நிரப்பாமல்
இதயசுவரில்
புன்னகையை பூசி வாழ்க்கையை கவிதையாக்கி
ரசிப்போம்....
************
மரமாக ஜீவன்பெற்றால்,
சருகாகும் இலை-உறவுகள்
உதிரும் பூக்கள் - காதல்
உயிர்தரும் வேர் - நட்பு...
*************
வார்த்தைபூசிய
கவிதைகளுக்கு
வண்ணம்பூச தேவையில்லை...
வண்ணம்பூசிய
ஒவியத்திற்கு
வார்த்தைபூச
தேவையில்லை....
"தேவையை
அறிந்து செயல்படு"....
*************
மறைத்தாலும் வெளிவரும்
அன்பின் முகமும்
நிலவின் முகமும்
ஒன்று....
மறைந்தாலும் மாறாத
அன்பின் நிறமும்
நிலவின் நிறமும்
ஒன்று....
**************
பூங்காற்றின்
கைகள்பட்டு
உதடுகள் உலருவதை
போல
ஆண்காற்றின் பார்வைகள்பட்டு
உள்ளம் உளருகிறது....
***************
உன் பார்வை படாமல் போனால்,
பகல்
பிறக்காமல் போகிறது
இரவு
இறக்காமல் போகிறது.....
**************
வெள்ளை பனிஆடை சூடூம் காலையும்
மஞ்சள் கதிர்ஆடை சூடும் மாலையும்
கருப்பு ஆகாயஆடை சூடும் இரவும்
இவைகளை காணவந்த கண்கள் வண்ணஆடை சூடும்.....
***************
பெண்ணே! உன்னால் வானிலைபோல் வாழ்நிலையும் மாற்றமடைந்து, பொழுதுகளும் பழுதடைந்து
நிற்கின்றன....
**************
 
 
 
 
 
 
 
 

மேகத்தின் முதுகில் ஏறி

சாலையில்,
பாதையின் நீளமே
பயணத்தின் நீளம்...
வாழ்வில்,
புன்னகையின் நீளமே
கண்ணீரின் நீளம்...
************
திறமைகள் திறக்கப்படாதவரை அவரவருக்கான அடையாளங்களும் அடைக்கபட்டிருக்கும்...
*************
நேற்றுவரை நேசமாக இருந்த நீ
இன்றுமுதல் என்சுவாசமாக
மாறியதால், என்வாழ்வின்வாசமும் மாறி வசந்தத்தின் வாயிலில் நிற்கிறேன் உன்னைகாண...
****************
பல நொடிகள் சிந்திக்க வைக்கும் உன்நினைவைவிட
சில நொடிகளில் உன்னை சந்திக்க வைக்கும் கனவே
அழகானது....
*************
கொதிக்கும் உன்கோபங்களும் அழகே எனக்காக உன்முகத்தில்
குதிப்பதால்.....
*****************
தலைக்கணத்தை
தள்ளி வை
ஆசைகளை
அள்ளி வை
ஆர்வங்களை
கொட்டி வை
அனுபவங்களை
அடைத்து வை
காயங்களை
பேச வை
தன்னம்பிக்கையை
கட்டி வை
முயற்சிகளை
ஓட வை
இவைகளை செய்து
வெற்றிகளை
தேட வை
வாழ்வை
மகிழ வை......
*************** 
வான் எழுதும் கவிதை நிலா...
நான் எழுதும் கவிதை
நீ...
 **************
இரவுதேவதை இருவிழிபார்வையில் நீச்சலாட வரமால், நாணஉடை கோர்த்து
மேகத்தின்முதுகில்ஏறி வலம்வருகிறாள்
வானை....
***************