26 May 2014

ஓசோன் அடுக்கில் அடுக்கிவைத்தேன்

உயிரோசையில் உயிர்வாழ்ந்திடும் போது
"இதயம்"
கடிகாரமாய் காட்சியளித்தது...
வாழ்க்கை பயணத்தில் வந்தவர்கள் தங்கிபோனபோது
"இதயம்"
அறையாக
காட்சியளித்தது...
நேசித்தவர்களே உடைத்தபோது
"இதயம்"
கண்ணாடியாய் காட்சியளித்தது...
உறவெல்லாம்
கானல்நீரென
உணர்ந்தபோது
"இதயம்"
அனாதையாக காட்சியளித்தது...
தனிமைத்தீயில்
எரிந்தபோது
"இதயம்"
உயிர்களற்ற
பாலைவனமாய் காட்சியளித்தது...
இனிப்பான தருணங்களுக்கும் இடமுண்டென
"இதயப்பை"
காட்சியளிக்கிறது...



********

ஊமைஇமைகள் உதடுகளாய் உணரப்பட்டது 
என்னவளின் இமைகள் 
என்னுடன் பேசுகையில்...

******* 


ஒழித்துவைக்க மண்ணில் இடமின்மையால்,
ஓசோன் அடுக்கில் அடுக்கிவைத்தேன் உனக்காக எழுதிய கவிதைகளை
அதையும் துளையிட்டு தூக்கிசென்றுள்ளதாக இன்றுதான் அறிவியல்
ஆராய்ந்துள்ளது இந்ததகவல் என்றுதான் உன்னை வந்தடையஉள்ளதோ

*******

திசைபார்த்து எழுந்துவிழும்
உன்னை வைத்தே உயிர்பெறுகிறது பொழுதுகள்...
உறைந்த பனிக்கட்டி உடைந்துருகும் உன் பார்வைபடுகையில்...
மிதக்கும் ஆழியோடு தூளிஆடும் ஆதவன் அழகில்,
மிதக்காத
ஆழ்மனமில்லை...
அழுக்கெடுத்த ஆடைகளை உலர்த்திட காற்றின்கைகளைவிட
உன்கதிர்பார்வையே
போதுமானதே...
சுட்டெரிக்கும் சூரியனுக்கும் காதலியுண்டு மண்ணில்...
ஆகாயத்தின்மடியில் உறங்கிடும்போதே புரிந்தது அவள்தான் உன்
அன்னையென...
என்னைப்போல உனக்கும் உறவுகள் இல்லாமல் போனாலும் நம்மை படைத்த இறைவன் நமக்கு உறவுக்காரனானன் அதனால் தானோ உயிரில்லை
இறைவனுக்கும்...


******** 

No comments:

Post a Comment