26 May 2014

வரலாறில் வருவேனோ

இனம்பாராமல் தொட்டுசெல்லும்
காற்றை
ஏற்றுவாழும் சிலர்,
இனம்பாராமல் இதயம்தொட்டுசெல்லும் காதலை மட்டும் ஏன் எதிர்த்துவாழ்கிறார்களோ? வேளி தாண்டி
நுழைந்து கொண்டுதான் இருக்கிறது
உண்மையான காதல்...


******

நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எதிரியும்
தோழனாக
தோன்றுவான்...
அதைபோலவே
வெருப்பைகொட்டும் வாழ்க்கையையும் விரும்பிபார் வசந்தமழைதான் வாழ்நாள்முழுவதும்...
மனதின் எண்ணங்களே வாழ்வின் வண்ணங்கள்...
 
*******
 
பெண்ணே! உன் கண்ணில் அழகாய் தெரிந்ததற்காக,
உடலை துண்டாக்கி
உயிரை பறித்து சூடிரசித்தவள் நீ வாசம்வற்றிபோகவும் வீசிஎறிந்தாயடி வீதியில் என்னை...
இப்படிக்கு,
ரோஜா.
இதைபோல தான் பெண்ணே!
உன் உள்ளம்கவரும் ராஜாவின் வாழ்க்கையும் உதிருமோ?
 
*******
 
பாவையே!
மோதல் நடத்திய மூச்சுகாற்றால் இதயம் பஞ்சாக பறப்பதும்,
தாக்குதல் நடத்திய பார்வையால்
பாறைபோல் இதயம் நகராதிருப்பதும்
காதலல்ல...
நினைவின் மோதலால் நெஞ்சம் அவளோடு மிதப்பதும்,
தனிமையின் தாக்குதலால் நெஞ்சம் அவளால் உடைவதுமே காதல்...
 
********
 
கல்வியின் வாசனை அறியாதவனும்,
காதலின் வாசனையால் கவர்ந்திழுக்கபடுவான் கவிதைகள்எழுத...
 
*******
 
காலைவானில் காணமால்போகாமலிருக்க ஆகாயநிலவிற்கு
ஆக்ஸிஜன் அனுப்பி உயிர்அளித்தேன்...
உயிர்பூத்த நிலவாலும் உள்ளத்தில்பூத்த உன்னாலும்
அகிலமும் அகமும் அழகானதடி...
இரத்தநாளங்களில்
கவிதைகளாய் வழிந்து நரம்பில் நடனமாடி இறுதியில் இதயம் சேர்ந்தாயடி...
தூங்கா துடிப்பாகி உன்ஆழ்மனதுள் ஆயுள்கரைப்பேனடி...
விழிகளை விடியல்உரசும்வரை உணரவில்லை
கண்ணோடு
வாழ்ந்தது கனவென...
கனவுகலைந்த பிறகு புரிந்தது வாழ்ந்தது பெண்ணே!
உன் நினைவென...

*******

ஊஞ்சலாடும் பார்வைகள் ஏனோ உனைகண்டதும் ஊனமானதோ...
கதை பேசும் விழிகள் ஏனோ உனைகண்டதும் கவிதைபேசுதோ...
ஊமை விழிகள்
ஏனோ உனைகண்டதும்
உரையாடுகிறதோ...

இரவின் இருளில் உறங்கிய இருவிழிகள் ஏனோ
உனைகண்டதும் உறக்கத்தை தொலைத்ததோ...
உருவம் வாங்கி உயிர்வாழ்ந்த விழி ஏனோ
உனைவாங்கியதும்
உறைந்துபோனதோ...

********

உன்னை எழுத தமிழிடம் வார்த்தைகள் இல்லை...
உன்னை அறிவியலால் ஆராயமுடியவில்லை...
இவைகளால் இயலாததை
நான் இயக்கிபார்க்கிறேன் உன்னால்
வரலாறில் வருவேனோ...

**********
 
 
  

 

கண்ணீரை செலவிட்டு

மின்சார உணவால் இயங்கும் இயந்திரமனிதன் போல,
மின்சாரபெண்ணே!
உன்நினைவின் உணவால்
இயங்குகிறது
எந்தன் இதயமடி...

*******

"பிரிவென்பது"-
உறவைமுறிக்க
உருவான ஆயுதமாகிறது உன்பார்வையில்...
உன்னை அதிகமாய் நேசிக்கவைத்திடும் காரணியாகிறது என்பார்வையில்...

*******

உன்மீதுள்ள அதிகஅன்பை உறவை சேமிக்கும்
"இதயம்"
உணர்ந்ததைவிட, கண்ணீரை செலவிட்டு
"இருவிழிகள்"
உணர்ந்த தருணமே அதிகம்......

********

உயிர்கள்
வாழாமல்போனால்
உள்ளமும் பாலைவனமாகிவிடும்...

*******

பெண்ணே!
உன்னை கண்டதும்
உடல்உள்ளேஉறங்கிய ஹார்மோன்களும் கவிதைகளை சுரக்க ஆரம்பித்துவிட்டன என்னில்...

********

கோபத்திற்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஊசிப்பார்வை...
கண்ணீருக்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஈரப்பார்வை...
இவைகளை போலவே
காதலிற்கு உதாரணம் தந்துபோகும் அவளது ஓரப்பார்வை...

********

கவர்ந்திழுப்பது காந்தத்தின்குணமென
"அறிவியலாள்" அன்று அறிந்தேன்...
கருவிழிகளின்குணமும் அதுவென்றே
"அவளால்" இன்று  புரிந்தேன்...

********

பிரிவை சந்திக்காதவரை
வலிகளின் பொருள்புரியவில்லை பெண்ணே!
நீ வசிக்கும் என்
நெஞ்சத்திற்கு..

********





 
உடலுக்குள் துடித்திடும்
"உயிர்"
போல
எனக்குள் துடிக்கிறாய்
"நீ"....

******

மூடிய ஜன்னலின்வழி முகம் காட்டும்
பௌர்ணமிநிலவை போலவே
உறவுமுறிந்தபிறகும் முகம் காட்டுகிறது
உன் பசுமையானநினைவுகள்...

******

வான்தோட்டத்தில் பூத்திடும் நட்சத்திரத்தின் அளவையும்,
மனதோட்டத்தில்
பூத்திடும் நம்பிக்கையின் அளவையும்,
"குறிப்பிட"முடிவதில்லை
பூமியென்னும்தோட்டத்தில் பூத்த எவராலும்....

******

மறுசுழற்சியில்
பிறந்திடும் காகிதமல்ல காதல்...
ஒற்றைசுழற்சியில் வாழ்ந்திடும் உயிர்கள் உணர்ந்திடும் உணர்வே
காதல்...


******

இருவிழிகளின் தேடல், விரும்பிய முகமே..
இதயத்தின் தேடல், உண்மையான உறவுகளே..
இருவிழிகளின் தேடல் முடிவுற்றாலும் இதயத்தின் தேடல் முடிவிலியாகிறது
சிலரது வாழ்வில்...


*****

எதற்கும் விலைபோகாமல் இருப்பதாலும்,
உடல் தூரம்சென்றாலும் உள்ளங்கள் சங்கமிப்பதாலும்,
எச்சூழ்நிலையிலும் எடைகுறையாமல் இருப்பதாலுமே
முழுமைபெறுகிறது உண்மையான அன்பு...


******

கண்ணம்அருந்தும் கண்ணீருக்கு மரணம்தந்து ஆறுதல்மருந்தளித்து மனதருகில்இருந்தவர்களே சில நேரங்களில்,
துன்பங்களை தூவி
ஆறாத காயங்களை அன்பளிப்பாக்கிவிட்டு தூரம்செல்வதுண்டு....


******* 

 

மனதின் வாசமறிய....

எழுதிவைத்த கவிதைகள் எரிந்துபோனாலும்
மறுபடி
பிறந்துவிடும்
எழுதிய கவிஞன் மரணத்தீயில் எரியாதவரையில்...


*****

மண்ணின் வாசமறிய விண்ணின்ஆராய்ச்சியே
"மழை"
மனதின் வாசமறிய மனிதனின்ஆராய்ச்சியே
"காதல்"


*****

சுவாசிக்க காற்றுவாங்குவதைவிட 
கடினமாகிப்போனது
நேசிக்க உறவுகள்வாங்குவது...


******

தொட்டிக்கயிற்றில் ஊஞ்சலாடும் வயதில், அன்னைமடிதான் அழகான இடமென
இதயம் எண்ணியது...
இளைமைக்கயிற்றில் ஊஞ்சலாடும் வயதில்,
நண்பர்களின் நந்தவனகூட்டத்தில் நானும்கலந்திருப்பது
அழகென இருவிழியும் எண்ணியது...
மரணக்கயிற்றில் உயிர்ஊஞ்சலாடும் நொடியில்தான் புரிந்தது அழகென்பது அன்பானவர்களின் நினைவென


*******

பிரிவின் நீளம் குறைவென்றாலும், கடந்துசெல்பவனுக்கே காயங்கள் புரியும்

******

விழிகளுக்கு
பாதைதந்த
பார்வை
பிரிந்துபோனால், இருட்டின்பிடியில் இருவிழி வாழும்....

 உள்ளத்துக்கு
நேசம்தந்த
உறவுகள்
பிரிந்துபோனால்,
நினைவின்பிடியில் நெஞ்சம் வாழும்....


******

உடலுடன்பிறந்த
உயிர்
பிரியும்வேளையில்,
வாழ்வின்சுவாசம் கல்லறைக்குள் அடங்கிவிடும்....
பிரியமுடன்பிறந்த
நீ
பிரியும்வேளையில்,
வாழ்வின்சுவாசம் நினைவின்அறைக்குள் நீண்டுவிடும்....
 


********

பிரிவென்பது
உன்னால்
தரப்படும்வரை வலிக்கவுமில்லை
இனிக்கவுமில்லை......


*******
 

ஓசோன் அடுக்கில் அடுக்கிவைத்தேன்

உயிரோசையில் உயிர்வாழ்ந்திடும் போது
"இதயம்"
கடிகாரமாய் காட்சியளித்தது...
வாழ்க்கை பயணத்தில் வந்தவர்கள் தங்கிபோனபோது
"இதயம்"
அறையாக
காட்சியளித்தது...
நேசித்தவர்களே உடைத்தபோது
"இதயம்"
கண்ணாடியாய் காட்சியளித்தது...
உறவெல்லாம்
கானல்நீரென
உணர்ந்தபோது
"இதயம்"
அனாதையாக காட்சியளித்தது...
தனிமைத்தீயில்
எரிந்தபோது
"இதயம்"
உயிர்களற்ற
பாலைவனமாய் காட்சியளித்தது...
இனிப்பான தருணங்களுக்கும் இடமுண்டென
"இதயப்பை"
காட்சியளிக்கிறது...



********

ஊமைஇமைகள் உதடுகளாய் உணரப்பட்டது 
என்னவளின் இமைகள் 
என்னுடன் பேசுகையில்...

******* 


ஒழித்துவைக்க மண்ணில் இடமின்மையால்,
ஓசோன் அடுக்கில் அடுக்கிவைத்தேன் உனக்காக எழுதிய கவிதைகளை
அதையும் துளையிட்டு தூக்கிசென்றுள்ளதாக இன்றுதான் அறிவியல்
ஆராய்ந்துள்ளது இந்ததகவல் என்றுதான் உன்னை வந்தடையஉள்ளதோ

*******

திசைபார்த்து எழுந்துவிழும்
உன்னை வைத்தே உயிர்பெறுகிறது பொழுதுகள்...
உறைந்த பனிக்கட்டி உடைந்துருகும் உன் பார்வைபடுகையில்...
மிதக்கும் ஆழியோடு தூளிஆடும் ஆதவன் அழகில்,
மிதக்காத
ஆழ்மனமில்லை...
அழுக்கெடுத்த ஆடைகளை உலர்த்திட காற்றின்கைகளைவிட
உன்கதிர்பார்வையே
போதுமானதே...
சுட்டெரிக்கும் சூரியனுக்கும் காதலியுண்டு மண்ணில்...
ஆகாயத்தின்மடியில் உறங்கிடும்போதே புரிந்தது அவள்தான் உன்
அன்னையென...
என்னைப்போல உனக்கும் உறவுகள் இல்லாமல் போனாலும் நம்மை படைத்த இறைவன் நமக்கு உறவுக்காரனானன் அதனால் தானோ உயிரில்லை
இறைவனுக்கும்...


******** 

கரையாத மையாய் பெண்"மை"

இதழைவிட
"இருமடங்கு"
இதயம் பேசுகிறது அருகில்வசிக்கும் அவளிடம்...

******

கன்னியும்,கவிதையும்:-
நடனமிடும் கவிதைகளே அவளது இமைகள்
மூச்சுவிடும் கவிதைகளே
அவளது இதயத்துடிப்புகள்
தவழும் கவிதைகளே அவளது புன்னகைகள்
ஈரமான கவிதைகளே அவளது கண்ணீர்த்துளிகள்
தூங்காத கவிதைகளே
அவளது நினைவுகள்...
எனக்காகவே உயிர்வாழ்ந்திடும் கவிதையே
அவள் தான்...
கவிதைக்காகவே உயிர்வாழ்ந்திடும்
தமிழும் நானே 


******

துடித்திட இமைகளுக்கு தெரியுமென்பதால்,
`இமை'
இதயமாக வாழ முடியாததைப்போலவே
தழுவிட கடலலைக்கு தெரியுமென்பதால்,
`கடல்'
காதலனாக
வாழமுடியாது....


*****

தூவலெடுக்காமல்
என் விரல்கள்
தூங்கப்போனாலும்,
ஆணே!
உன் அழகியவிழிகள் அமைதிபெற
விடுவதில்லை...


******

மற்றவர்களை காயமாக்கிடுவதற்குள்,
நகங்களை துண்டிப்பதைப்போலவே
வார்த்தைகளையும் துண்டித்துவிட்டால் வார்த்தைகளின் சொந்தங்களுக்கு
துன்பமே இல்லை.....


*****

வெற்றிடத்தாளை கண்டதும் எழுத்தால் கரையநினைக்கும்
பேனா"மை"...
காயங்களை
கண்டதும் கண்ணீரால் கரையநினைக்கும்
கண்"மை"...
இவைகளை போலல்லாமல்
கரையாத மையாய்
பெண்"மை"
இருக்குமென நினைக்கதவறினேன் அழகியஆணே!
உன் நினைவை
கண்டதால்...


******

அதிகமாக நேசித்ததற்கு ஆதாரமாய்
காயங்களும்,
ஆழமான காயத்திற்கு ஆதாரமாய்
கண்ணீரும்,
நேசிக்காத நீ தருவது சுலபம்
நேசித்த நான் கடந்துவருவதுதான் கடினம்


*****

அருகாமை உணர்த்தாத அன்பை
பிரிவு உணர்த்திவிடும்...


*****    

என்னவன் என்னில் மின்னுவது

அன்பானவர்களை அடையாளம்காட்டிடும், "துன்பமும்"
அழகானதே என்பார்வையில்....

*****

நான்கிமைகளின் நடனாலயம் -
"இருவிழிகள்"
அன்பானவர்களின்
சரணாலயம் -
"இதயம்" 


*****

நினைவின்மழையில்
நனைந்திடும் நொடியில்,
"என்னவன் என்னில் மின்னுவது"
இதயம் இதுவரை ரசிக்கமறந்த அழகில் ஒன்றானது...


******

உடலோடு பொருந்திய உயிரைவிட,
உள்ளத்தோடு பொருந்திய
உன் நினைவுகள் ரசிக்கத்தக்கவை...


*****

உடல்முழுதும் பாயும் உதிரத்தால்
உயிர்வாழ்ந்த "உள்ளம்" ஏனின்று
உன்னால் உயிர்வாழநினைக்கிறதோ?
காதலின் செயல்பாட்டில் சிக்கினால் கடவுளுக்கும் என் நிலைமை தான் 


*****

உன்னால் உணரப்பட்ட உண்மை:-
அதீத அன்பை
நேசித்தவர்மீது
வைத்தால்,
நேசித்தநெஞ்சம்
பலமுறைகள்
மரணவலி காண வேண்டியிருக்கும்...


*******

உயிரில் உதித்தவர்களே உதைக்கும்போதுதான் பிறந்துவிடுகிறது
 காயங்களின் குழந்தையாக "கண்ணீர்"...

********
 
அவளது
கற்பனையில் கட்டினால்,
கவிதையின்
ஆயுளும் அதிகமாகிறது....

******


 

விழியிலும்,வழியிலும்...

மொழி இருக்கும்போது ஏன் விழியில் பேசுகிறாய்
காரணம் கண்டறிந்தேன்,
மொழியைவிட உன் விழியிடம்தான் வார்த்தைகள் அதிகமாம்...

*****

இறந்தகாலத்தை
நினைத்து
நிகழ்காலத்தை
இழக்காத கடிகாரம்போலவே இதயமும்துடித்தால் வருங்காலத்திடம்
வசந்தம்புகுந்திடும்...

*****

எந்தன் தூவலின் தூக்கம் பறிக்கும் பெண்ணே! தூவலுன்னை கையாளஆரம்பிக்கவும் கற்பனைமட்டும் குவியவில்லை
கவிதையும்தான்...

******

அன்பானவர்களின்
"மௌனம்" போல கொடியமரணத்தை, என்னெதிரியின் போர்வாளுக்குக்கூட தரத்தெறியவில்லை...

*****

சேயின்மீது உயிர்வாழமுடியாத
தாயின் கோபமும்,
நட்பின்மீது உயிர்வாழமுடியாத மரணமும்
ஒன்றே...

*****

விலகிப்போனபோதும் விழியிலும்,வழியிலும் அவளே
கடந்துபோனபோதும்
கவிதையிலும்,காற்றிலும் அவளே
ஏமாற்றிபோனபோதும் என்னிலும்,எதிலும் அவளே...

******

கவிதைகளை படைத்திட
"கருவறை" தேவைப்படுவதில்லையென நெஞ்சம் எண்ணியது தவறாகிப்போனது
என்னைப் படைத்த அன்னையை எண்ணியவேளையில்...

********

 

8 May 2014

இரத்தமென்னும் உணவால்

அன்பு என்பதும் சுற்றிதிரியும் காற்றைபோலத்தான் உன்அருகில் நின்றாலும் அதன் உருவம் தெரிவதில்லை உனக்கு நீ சுவாசிக்காத வரையில்....

*******

அவளது கண்பாராமல் கவிதை எழுதிவைக்கிறேன் என்னைவிட என்கவிதையை அதிகம் நேசித்துவிடுவாளோ என்னும் பயத்தால்......

********

அவளது இதயத்தின் ஓசையால் இசை தேவைப்படவில்லை,
அவளது உடல்வெப்பத்தால் கதிரவன் தேவைப்படவில்லை,
அவளது மூச்சுக்காற்றால் சுவாசிக்க காற்றும் தேவைப்படவில்லை,
அவளது கருவறையால் வசிக்க பூமியும் தேவைப்படவில்லை,
அவளது இரத்தமென்னும்உணவால் ஆதாரமும் தேவைப்படவில்லை,அவளால் ஆண்டவனும் தேவைப்படவில்லை,
கடவுள்,காற்று,நிலம்,ஆதாரம்,வெளிச்சம் இவை தேவைப்படாமல் உயிர்வாழ்ந்தேன் அன்னை கருவறைக்குள் ........


********

வானமும் பேசும் இடிஓசையுடன்,
வானமும் கண்ணீர்வடிக்கும் மழைத்துளியுடன்,
வானமும் நாணம்காணும்
செந்நிறத்துடன்,
வானமும் மின்னல் அலங்காரத்தில் மின்னும் மின்னலுடன்,
வானமும் காதல் கொண்டது வெண்ணிலவுடன்,
வானமும் ஆடை அணிந்தது பகலுடனும் இரவுடனும்..........


*******

இடி மின்னல் தாக்காதபோதுதான் புரிந்தது பூமியில்வசித்தும் வானம்தாண்டி தாயின் கருவறையில் குழந்தையாக வசிக்கிறேனென....

*******

அன்பை உன்னருகில் இருக்கும்போது உணரவில்லை உன்அன்பைதேடி
அலையும்போது உணர்கிறேன் உன்னை.... கண்ணருகில் கண்ணீரும் நெஞ்சத்தின்அருகில் நினைவும் மட்டுமே என்னருகில் நிற்கிறது.....


******

கவலைகளை தாங்கும்போது கணமாவதும்,
காதலை
தாங்கும்போது
மாயமாவதும்,
இன்பங்களை தாங்கும்போது இதமாவதும்,
அன்பை
தாங்கும்போது அழகாவதும்,
மனித இதயம் மட்டுமே......


*******

உதிர்ந்து இறப்பதே மலரின் இறுதிநொடிஆசை
உருகி இறப்பதே மெழுகின் இறுதிநொடிஆசை
உன் அன்பால்உருகி உயிர் உதிர்வதே என் இறுதிநொடிஆசை.....


*******

       

உருகாத பனிகட்டி

வாய்வார்த்தைகள்கூட அடைபட்டுகிடந்தன அந்நியனிடம்......
நம்மை வாய்திறந்து பேசவைக்க உயிரை தியாகம்செய்தவர்களின் வரலாறை மட்டுமல்ல அந்நியனை அடித்துவிரட்டிய வீரர்களையும் நினைவில் நிற்கவைக்கும் இனியநாளே நாளை.....
பலரது உடலோடும் இரத்தம் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டே மண்ணில் ஓடியது இப்போது சுதந்திரமாக வாழும் நம்மனதிலும் மகிழ்ச்சியோடு ஓடுகிறது..


******

நமக்காக சுழலும்பூமி நின்றுபோனாலும் நம்மிடையே சுழலும் நட்பு நின்றுபோவதில்லை.....
ஆயிரம் ஆண்டுகள் உன்னருகில் வாழ்ந்தாலும் என்இதழ் நீ என்னமதமென்று கேட்கநினைப்பதில்லை....
நிலையில்லா பணத்தை மதிக்காமல்,
நிலையான உன்குணத்தை
மதித்து மலரும் நல்லுறவே நம்நட்பு....


******

எதிர்பார்க்கும் உறவுகள் அன்பாய் இருப்பதில்லை...
எதிர்பார்க்கபடாத உறவுகள்
அன்பாய் இருக்கின்றன....
கிடைக்காத அன்புக்காக கண்ணீர்சிந்துவதை விட
கிடைத்த அன்புக்காக புன்னகையை சிந்தலாம்...


******

வெயிலின் பார்வைபட்டு உருகாத
பனிகட்டிஇல்லை.......
அன்பின் பார்வைபட்டு
உருகாத
உயிரும்இல்லை..


******

பேனாவின் முனையைப்போல இதழின் வார்த்தையும் கூர்மையானதென........ சிலநேரங்களில்
வெல்லும்,
சிலநேரங்களில் கொல்லும்என இரு தருணங்களை உணரும்போது தெளிவுபெறும் உண்மை......


*******

நிஜமான நட்பு நிறம்பார்க்காது,
அன்பான நட்பு
முகத்தின்அழகை பார்க்காது,
இனிய நட்பு
இதழின் குரல்தன்மையை
கேட்காது,
பிரியமான நட்பு
பிரிய நினைக்காது,
உண்மையான நட்பு
என்றுமே உடைய விரும்பாது,
ஆழமான நட்பு
எதையும்
எதிர்பாராது.....


******

பெண்ணே! உன் இதயத்திற்கு என்னை விரும்பமட்டும்தான் தெரியுமென நினைத்தேன் உள்ளத்திற்குள்ளே வந்தபிறகுதான் தெரிந்தது என்னை வெருக்கவும் தெரியுமென.....     

பிறப்பதும் இறப்பதும்

கடற்கரை மணலுக்கும் காதல்பிறக்கும்
அவனது கால்தடங்களை காண்கையில் ...



******

மழைத்துளிகள் மண்ணில்எழுதிய கவிதைகளை
கண்கள் கவனிக்க
மறந்தவேளையிலும், மழைத்துளிகள் செய்யவிரும்பிய சேவையை செவி
சாய்த்துகேட்க மறுத்தவேளையிலும்,
சுவாசப்பாதையில் வேறுன்ற ஆசைப்பட்ட வெப்பக்காற்றை வெல்லவந்தது மழையின்தூதாக மண்வாசம் .....


******

தவழும்நேரத்தில் அன்னை
இல்லாததைவிட, துவளும்நேரத்தில் அன்னையாக யாரும் இல்லாத
கணம் கொடியதாகிடும்...


*******

பிறப்பதும் இறப்பதும் நிலவின்
வாடிக்கை...
இறப்பில்லாமல் இருப்பது
அன்பே! உன் நினைவின்
வேடிக்கை...


*********

என் கவிதையின் கால்கள்
பெண்ணே! உன்னை
வருட முயற்சிக்க அழைந்ததைவிட,
திருட முயற்சிக்க அழைந்ததே அதிகமடி...


********

உன் நிஜத்தின் பின்னால்
நிழல்
அழைந்ததைவிட,
உன் நினைவின் பின்னால்
நான்
அழைந்ததே அதிகமடி.....




********

ததும்பும் உன் நினைவிடமிருந்து தப்பிப்பிழைத்திட முடியாமல்
தவிக்கிறேனடி...


********

உன்னை என்னிதயம் மறக்கநேர்ந்தாலும் இதழ்கள் மறக்கவிடுவதில்லை, மற்றவரின் பெயரைமறந்து உன்பெயரை உளறிக்கொண்டே இருக்கிறது ....

*********

தவழும்மழலைபோல் தவழ்கிறாய் வானில் இரவு நேரங்களில்,
தேய்ந்து மறைந்தாலும் மீண்டும் மலர்கிறாய் ஆகாயதோட்டத்தில்,
அடுக்குமாடிகட்டிடத்தில் நின்று கரங்கள்நீட்டி தொடமுயற்சிக்கிறேன் உன்முகத்தை வானிலவே! ஓடுகிறாய் நாணத்தால்........


*********

ஒற்றுமையை நினைவுகூர்வது
சுதந்திரம்.......
அந்நியர்களை வெளியேற்றியதை நினைவுகூர்வது
சுதந்திரம்.......
அடிமைவாழ்க்கை சிதைந்துபோனதை
நினைவுகூர்வது
சுதந்திரம்.......
உயிரின் தியாகத்தை
நினைவுகூர்வது
சுதந்திரம்.......


*********

         

நிலவுக்கும் அவனுக்கும்

நிலா :-
நீ விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஓரிரவே உயிர்எழும்புகிறது என் நிம்மதி
ஏனெனில்,
உன் அசைவுகளை ரசிக்க யாருமில்லை என்பதால்

*******

அதிக உறவுகளாலல்ல அன்பான உறவுகளாலே ஆயுளும் ஆளவிரும்புகிறது என்னை

********

அலங்காரமிடாத
நிலவுக்கும் அவனுக்கும் அழகுத்தேர்வாம் ...

********

மண்ணின்கீழ்
வாழ்ந்தும்
மரத்தின் வேருக்கு
தொடர்கிறது சுதந்திரம்...

********

செயற்கை
அழகின்"உதவியால்" மிலிர்ந்திடும்
பெண்மையை விட,
இயற்கை அழகால்
இதயம்கவர்ந்திடும் ஆண்மையும் அழகென
அறிந்தேன் அவனால் ...


********

வாசனையிருந்தும்
அவள் கூந்தலை தேடி இறக்கின்றன பூக்கள்
அதைப்போல
வாழவழியிருந்தும் அவளை தேடி இறக்கின்றன என்நாட்கள்....


********

நிழலில்லா நிலவின் மொழியும்
நீயில்லா நினைவின் மொழியும் பொய்யே . . .


********

விழியின்மழை
விதைத்த வினா :-
இதயத்தைவிட உன்மேல்
அதிகம் பிரியம்சுமப்பது இருகண்கள்தானோ?


********

ஆண்கவிஞர்களின் அழகான கவிதைகள்
அளவின்றியும் வாழவிரும்பும்
ஆனால்
அவளின்றி வாழவிரும்புவதில்லை ...


*********


 

கூந்தல்ஈரம்

அவள் கண்ணி"மை"க்கு இணையாக கவிதை இயற்றமுயலாமையல், முதல் தோல்வியை தழுவியது என் எழுதுகோல் "மை"...

*******

தரை இறங்க அரைநிலவும் நினைக்கும்
பெண்ணே! உன்னருகே பயணிக்க..
கூந்தல்ஈரம் குடிக்கும் காற்றும் துணையாகவர நினைக்கும்
பெண்ணே! உன்னோடு பயணிக்க...
நடுவானில் பூத்தநட்சத்திரமும் நடைபாதையில்
பூக்க நினைக்கும் பெண்ணே! உன்பாதத்தோடு
பயணிக்க...

********

அன்னை இல்லாமல் போனால் அன்பை மறப்போம்
தேவைகள் இல்லாமல் போனால் தேடலை மறப்போம்
உண்மை இல்லாமல் போனால் உறவுகளை மறப்போம்
கண்கள் இல்லாமல் போனால் கனவுகளை மறப்போம்
வண்ணம் இல்லாமல்
போனால் வானவில்லை
மறப்போம்
வாசங்கள் இல்லாமல் போனால் நேசங்களை மறப்போம்
காதல் இல்லாமல் போனால் காயங்களை மறப்போம்
காயங்கள் இல்லாமல் போனால் கடவுளை மறப்போம்
இதயம் இல்லாமல் போனால் இவைஅனைத்தையும் மறப்போம்
 
*********
 
நிலவின்கவிதையில்
நீச்சலாடும் இரவில் பறவைகள்கூட பறப்பதில்லை
"இதயம்" மட்டும் ஏன் பறக்கிறதோ
என்னவளைத்தேடி...
 
*********
 
பார்வைகளின் தரிசனத்தில் படரும் காதல் பல்லாண்டுகள் வாழ்வதில்லை...
உள்ளங்களின் தரிசனத்தில் உருவாகும் காதல் பல்லாண்டுகள் வாழாமல் சாவதில்லை..
 
********
 
உயிரைகளவாடும் மரணத்திடமிருந்தும் மீட்கலாம் என்னை...
ஆனால்
உள்ளத்தைகளவாடும் உன்னிடமிருந்து மீட்கமுடியாது என்னை...
 
**********
 
உன் தேவைக்காக சுழலும் மின்விசிறியல்ல
என் இதயம்,
நீ நினைக்கும் நேரங்களில்
அனுபவித்து
அணைத்துசெல்ல...
 
*********

4 May 2014

சிரிப்பின் நீளம் அதிகம்

மழலையே,,,
உன் தெளிவில்லாத வார்த்தைகளும்
என்னிடம் விடை கேட்டு
தேங்கி நிற்கிறது... தேனாக...!


மழலையே,,,
சோகங்கள் அறியாத உனக்கும்
ஏன் கண்ணீர் வடிகின்றதோ...!

மழலையே,,,
உனது கால்தடங்களால்
பூமிக்கு ஏற்பட்ட காயங்கள் எத்தனையோ???


மழலையே,,,
உன்னிடம் தான் கடவுளும் கடன் வாங்கி சென்றுள்ளாரோ??
உன் மின்னல் புன்னகையை...!


மழலையே,,,
உன் சிரிப்பின் நீளம் அதிகம்...
அதனால் தான்
என்னை உன்னிடம் கட்டிப்போட்டுள்ளாயா???


மழலையே,,,
உன் ஒற்றை புன்னகையில்
என் கற்றை துன்பம் காணாமல் போனது...!


மழலையே,,,
உன் ஒற்றை விரல் தொட்டு சென்றதில்
என் கனமான மனம் கரைந்து போனது...!