26 May 2014

கரையாத மையாய் பெண்"மை"

இதழைவிட
"இருமடங்கு"
இதயம் பேசுகிறது அருகில்வசிக்கும் அவளிடம்...

******

கன்னியும்,கவிதையும்:-
நடனமிடும் கவிதைகளே அவளது இமைகள்
மூச்சுவிடும் கவிதைகளே
அவளது இதயத்துடிப்புகள்
தவழும் கவிதைகளே அவளது புன்னகைகள்
ஈரமான கவிதைகளே அவளது கண்ணீர்த்துளிகள்
தூங்காத கவிதைகளே
அவளது நினைவுகள்...
எனக்காகவே உயிர்வாழ்ந்திடும் கவிதையே
அவள் தான்...
கவிதைக்காகவே உயிர்வாழ்ந்திடும்
தமிழும் நானே 


******

துடித்திட இமைகளுக்கு தெரியுமென்பதால்,
`இமை'
இதயமாக வாழ முடியாததைப்போலவே
தழுவிட கடலலைக்கு தெரியுமென்பதால்,
`கடல்'
காதலனாக
வாழமுடியாது....


*****

தூவலெடுக்காமல்
என் விரல்கள்
தூங்கப்போனாலும்,
ஆணே!
உன் அழகியவிழிகள் அமைதிபெற
விடுவதில்லை...


******

மற்றவர்களை காயமாக்கிடுவதற்குள்,
நகங்களை துண்டிப்பதைப்போலவே
வார்த்தைகளையும் துண்டித்துவிட்டால் வார்த்தைகளின் சொந்தங்களுக்கு
துன்பமே இல்லை.....


*****

வெற்றிடத்தாளை கண்டதும் எழுத்தால் கரையநினைக்கும்
பேனா"மை"...
காயங்களை
கண்டதும் கண்ணீரால் கரையநினைக்கும்
கண்"மை"...
இவைகளை போலல்லாமல்
கரையாத மையாய்
பெண்"மை"
இருக்குமென நினைக்கதவறினேன் அழகியஆணே!
உன் நினைவை
கண்டதால்...


******

அதிகமாக நேசித்ததற்கு ஆதாரமாய்
காயங்களும்,
ஆழமான காயத்திற்கு ஆதாரமாய்
கண்ணீரும்,
நேசிக்காத நீ தருவது சுலபம்
நேசித்த நான் கடந்துவருவதுதான் கடினம்


*****

அருகாமை உணர்த்தாத அன்பை
பிரிவு உணர்த்திவிடும்...


*****    

No comments:

Post a Comment