8 May 2014

கூந்தல்ஈரம்

அவள் கண்ணி"மை"க்கு இணையாக கவிதை இயற்றமுயலாமையல், முதல் தோல்வியை தழுவியது என் எழுதுகோல் "மை"...

*******

தரை இறங்க அரைநிலவும் நினைக்கும்
பெண்ணே! உன்னருகே பயணிக்க..
கூந்தல்ஈரம் குடிக்கும் காற்றும் துணையாகவர நினைக்கும்
பெண்ணே! உன்னோடு பயணிக்க...
நடுவானில் பூத்தநட்சத்திரமும் நடைபாதையில்
பூக்க நினைக்கும் பெண்ணே! உன்பாதத்தோடு
பயணிக்க...

********

அன்னை இல்லாமல் போனால் அன்பை மறப்போம்
தேவைகள் இல்லாமல் போனால் தேடலை மறப்போம்
உண்மை இல்லாமல் போனால் உறவுகளை மறப்போம்
கண்கள் இல்லாமல் போனால் கனவுகளை மறப்போம்
வண்ணம் இல்லாமல்
போனால் வானவில்லை
மறப்போம்
வாசங்கள் இல்லாமல் போனால் நேசங்களை மறப்போம்
காதல் இல்லாமல் போனால் காயங்களை மறப்போம்
காயங்கள் இல்லாமல் போனால் கடவுளை மறப்போம்
இதயம் இல்லாமல் போனால் இவைஅனைத்தையும் மறப்போம்
 
*********
 
நிலவின்கவிதையில்
நீச்சலாடும் இரவில் பறவைகள்கூட பறப்பதில்லை
"இதயம்" மட்டும் ஏன் பறக்கிறதோ
என்னவளைத்தேடி...
 
*********
 
பார்வைகளின் தரிசனத்தில் படரும் காதல் பல்லாண்டுகள் வாழ்வதில்லை...
உள்ளங்களின் தரிசனத்தில் உருவாகும் காதல் பல்லாண்டுகள் வாழாமல் சாவதில்லை..
 
********
 
உயிரைகளவாடும் மரணத்திடமிருந்தும் மீட்கலாம் என்னை...
ஆனால்
உள்ளத்தைகளவாடும் உன்னிடமிருந்து மீட்கமுடியாது என்னை...
 
**********
 
உன் தேவைக்காக சுழலும் மின்விசிறியல்ல
என் இதயம்,
நீ நினைக்கும் நேரங்களில்
அனுபவித்து
அணைத்துசெல்ல...
 
*********

No comments:

Post a Comment