26 May 2014

மனதின் வாசமறிய....

எழுதிவைத்த கவிதைகள் எரிந்துபோனாலும்
மறுபடி
பிறந்துவிடும்
எழுதிய கவிஞன் மரணத்தீயில் எரியாதவரையில்...


*****

மண்ணின் வாசமறிய விண்ணின்ஆராய்ச்சியே
"மழை"
மனதின் வாசமறிய மனிதனின்ஆராய்ச்சியே
"காதல்"


*****

சுவாசிக்க காற்றுவாங்குவதைவிட 
கடினமாகிப்போனது
நேசிக்க உறவுகள்வாங்குவது...


******

தொட்டிக்கயிற்றில் ஊஞ்சலாடும் வயதில், அன்னைமடிதான் அழகான இடமென
இதயம் எண்ணியது...
இளைமைக்கயிற்றில் ஊஞ்சலாடும் வயதில்,
நண்பர்களின் நந்தவனகூட்டத்தில் நானும்கலந்திருப்பது
அழகென இருவிழியும் எண்ணியது...
மரணக்கயிற்றில் உயிர்ஊஞ்சலாடும் நொடியில்தான் புரிந்தது அழகென்பது அன்பானவர்களின் நினைவென


*******

பிரிவின் நீளம் குறைவென்றாலும், கடந்துசெல்பவனுக்கே காயங்கள் புரியும்

******

விழிகளுக்கு
பாதைதந்த
பார்வை
பிரிந்துபோனால், இருட்டின்பிடியில் இருவிழி வாழும்....

 உள்ளத்துக்கு
நேசம்தந்த
உறவுகள்
பிரிந்துபோனால்,
நினைவின்பிடியில் நெஞ்சம் வாழும்....


******

உடலுடன்பிறந்த
உயிர்
பிரியும்வேளையில்,
வாழ்வின்சுவாசம் கல்லறைக்குள் அடங்கிவிடும்....
பிரியமுடன்பிறந்த
நீ
பிரியும்வேளையில்,
வாழ்வின்சுவாசம் நினைவின்அறைக்குள் நீண்டுவிடும்....
 


********

பிரிவென்பது
உன்னால்
தரப்படும்வரை வலிக்கவுமில்லை
இனிக்கவுமில்லை......


*******
 

No comments:

Post a Comment