26 May 2014

விழியிலும்,வழியிலும்...

மொழி இருக்கும்போது ஏன் விழியில் பேசுகிறாய்
காரணம் கண்டறிந்தேன்,
மொழியைவிட உன் விழியிடம்தான் வார்த்தைகள் அதிகமாம்...

*****

இறந்தகாலத்தை
நினைத்து
நிகழ்காலத்தை
இழக்காத கடிகாரம்போலவே இதயமும்துடித்தால் வருங்காலத்திடம்
வசந்தம்புகுந்திடும்...

*****

எந்தன் தூவலின் தூக்கம் பறிக்கும் பெண்ணே! தூவலுன்னை கையாளஆரம்பிக்கவும் கற்பனைமட்டும் குவியவில்லை
கவிதையும்தான்...

******

அன்பானவர்களின்
"மௌனம்" போல கொடியமரணத்தை, என்னெதிரியின் போர்வாளுக்குக்கூட தரத்தெறியவில்லை...

*****

சேயின்மீது உயிர்வாழமுடியாத
தாயின் கோபமும்,
நட்பின்மீது உயிர்வாழமுடியாத மரணமும்
ஒன்றே...

*****

விலகிப்போனபோதும் விழியிலும்,வழியிலும் அவளே
கடந்துபோனபோதும்
கவிதையிலும்,காற்றிலும் அவளே
ஏமாற்றிபோனபோதும் என்னிலும்,எதிலும் அவளே...

******

கவிதைகளை படைத்திட
"கருவறை" தேவைப்படுவதில்லையென நெஞ்சம் எண்ணியது தவறாகிப்போனது
என்னைப் படைத்த அன்னையை எண்ணியவேளையில்...

********

 

No comments:

Post a Comment