31 December 2013

ஓசோன் அடுக்கில் அடுக்கிவைத்தேன்

மண்ணின் வாசமறிய விண்ணின்ஆராய்ச்சியே 
"மழை"
மனதின் வாசமறிய மனிதனின்ஆராய்ச்சியே
"காதல்"


*******

அருகாமை உணர்த்தாத அன்பை 
பிரிவு உணர்த்திவிடும்...

******

உயிரோசையில் உயிர்வாழ்ந்திடும் போது 
"இதயம்" 
கடிகாரமாய் காட்சியளித்தது...
வாழ்க்கை பயணத்தில் வந்தவர்கள் தங்கிபோனபோது 
"இதயம்" 
அறையாக
காட்சியளித்தது...
நேசித்தவர்களே உடைத்தபோது
"இதயம்"
கண்ணாடியாய் காட்சியளித்தது...
உறவெல்லாம்
கானல்நீரென
உணர்ந்தபோது
"இதயம்"
அனாதையாக காட்சியளித்தது...
தனிமைத்தீயில்
எரிந்தபோது
"இதயம்"
உயிர்களற்ற
பாலைவனமாய் காட்சியளித்தது...
இனிப்பான தருணங்களுக்கும் இடமுண்டென
"இதயப்பை"
காட்சியளிக்கிறது...


********

தொட்டிக்கயிற்றில் ஊஞ்சலாடும் வயதில், அன்னைமடிதான் அழகான இடமென
இதயம் எண்ணியது...
இளைமைக்கயிற்றில் ஊஞ்சலாடும் வயதில்,
நண்பர்களின் நந்தவனகூட்டத்தில் நானும்கலந்திருப்பது
அழகென இருவிழியும் எண்ணியது...
மரணக்கயிற்றில் உயிர்ஊஞ்சலாடும் நொடியில்தான் புரிந்தது அழகென்பது அன்பானவர்களின் நினைவென


**********

எழுதிவைத்த கவிதைகள் எரிந்துபோனாலும் 
மறுபடி
பிறந்துவிடும் 
எழுதிய கவிஞன் மரணத்தீயில் எரியாதவரையில்...

********

ஒழித்துவைக்க மண்ணில் இடமின்மையால்,
ஓசோன் அடுக்கில் அடுக்கிவைத்தேன் உனக்காக எழுதிய கவிதைகளை 
அதையும் துளையிட்டு தூக்கிசென்றுள்ளதாக இன்றுதான் அறிவியல் 
ஆராய்ந்துள்ளது இந்ததகவல் என்றுதான் உன்னை வந்தடையஉள்ளதோ

***********

No comments:

Post a Comment