31 December 2013

மிதக்கும் நிலவையும் ஏந்திநிற்பவள்

இனம்பாராமல் தொட்டுசெல்லும் 
காற்றை 
ஏற்றுவாழும் சிலர்,
இனம்பாராமல் இதயம்தொட்டுசெல்லும் காதலை மட்டும் ஏன் எதிர்த்துவாழ்கிறார்களோ? வேளி தாண்டி 
நுழைந்து கொண்டுதான் இருக்கிறது 
உண்மையான காதல்...

********

நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எதிரியும் 
தோழனாக 
தோன்றுவான்...
அதைபோலவே
வெருப்பைகொட்டும் வாழ்க்கையையும் விரும்பிபார் வசந்தமழைதான் வாழ்நாள்முழுவதும்...
மனதின் எண்ணங்களே வாழ்வின் வண்ணங்கள்...

*********

நேசித்தவரால் கொடுக்கபடும் காயங்களைவிட தண்டனை 
உலகில் வேறெதுவுமில்லை...

*********

தேநீர்அருந்தும்வேளையில் கிடைக்காத தித்திக்கும்இன்பம்,
அவனது பெயரை உச்சரிக்கும்வேளையில் 
உதடுகள் உராய்வதில் கிடைப்பதுமேனோ...

********

வெற்றியில் 
தோள் கொடுக்கும் தோழமையைவிட, தோல்வியிலும் 
தோள் கொடுக்கும் 
"நட்பே" 
நிரந்தரமாக நிலைக்கும்...

*********

முகம்பாராமல் 
.....முளைப்பது..... 
பலனைஎதிர்பாராமல்
.....வளர்வது.....
வயதுகளில்லாமல்
.....வாழ்வது....


~நட்பு

*********

ஆகாயம்:-

பகலும்,இரவும் பிறப்பது இவளது மடியில்...
எரிக்கும் கதிரவனையும் தாங்கிகொள்பவள் இவள்.. 
மிதக்கும் நிலவையும் ஏந்திநிற்பவள் இவள்... 
சிதறிய வெள்ளியையும் சிரிக்கவைப்பவள் இவள்..
மேகங்கள் ஓடிவிளையாடுவதும் மின்னல்கள் கண்அடிப்பதும்
வண்ணங்கள்
வளைவதும் இவளிடமே...
மழையின் தாயுமானவளும் இவளே...


************

No comments:

Post a Comment