31 December 2013

உயிரெழுத்தாக தெரிகிறாயடி

மின்சார உணவால் இயங்கும் இயந்திரமனிதன் போல, 
மின்சாரபெண்ணே!
உன்நினைவின் உணவால் 
இயங்குகிறது 
எந்தன் இதயமடி...

**********

பெண்ணே!
உன்னை கண்டதும் 
உடல்உள்ளேஉறங்கிய ஹார்மோன்களும் கவிதைகளை சுரக்க ஆரம்பித்துவிட்டன என்னில்...

**********

மற்றவரின் பார்வையில் ஓரெழுத்தாக 
தெரியும் 
"நீ" 
என்னிடத்தில் 
மட்டும் 
உயிரெழுத்தாக தெரிகிறாயடி...

********

எதிர்பார்ப்புகள் தோல்விபெறுகையில்
ஏமாற்றங்கள் 
வெற்றுபெறும்...

*******

"பிரிவென்பது"-
உறவைமுறிக்க 
உருவான ஆயுதமாகிறது உன்பார்வையில்... 
உன்னை அதிகமாய் நேசிக்கவைத்திடும் காரணியாகிறது என்பார்வையில்...

********

உன்மீதுள்ள அதிகஅன்பை உறவை சேமிக்கும் 
"இதயம்" 
உணர்ந்ததைவிட, கண்ணீரை செலவிட்டு 
"இருவிழிகள்" 
உணர்ந்த தருணமே அதிகம்....

*******

உயிர்கள்
வாழாமல்போனால் 
உள்ளமும் பாலைவனமாகிவிடும்...

*********

கோபத்திற்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஊசிப்பார்வை... கண்ணீருக்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஈரப்பார்வை... இவைகளை போலவே
காதலிற்கு உதாரணம் தந்துபோகும் அவளது ஓரப்பார்வை...

*********

கவர்ந்திழுப்பது காந்தத்தின்குணமென 
"அறிவியலாள்" அன்று அறிந்தேன்... 
கருவிழிகளின்குணமும் அதுவென்றே 
"அவளால்" இன்று 
புரிந்தேன்...

*********

பிரிவை சந்திக்காதவரை
வலிகளின் பொருள்புரியவில்லை பெண்ணே!
நீ வசிக்கும் என்
நெஞ்சத்திற்கு...

**********

கடலை காண சென்ற கண்கள் கண்ணீரை சுரப்பதன் காரணம்,
அலைபோல் அடித்துசென்ற அவனது நினைவாக இருக்குமோ?

**********

No comments:

Post a Comment