13 November 2013

கண்பார்வையில் நனையவைப்பாள்

செதுக்கிய சிற்பங்களை அடுக்காக தூக்கி சுமக்கும் கோபுரத்தின் உயரம்தாண்டி வளர்ந்து நிற்கிறது, ஒற்றை சிற்பமாக பெண்ணே! உன்னை தேக்கி வைத்திருக்கும் எந்தன் மனக்கோபுரம்....
**************
பட்டுபோன இலை
பழைய நிலைக்கு போகமுடியாததை போல,
இறந்தகாலம் இயல்புநிலைக்கு வரமுடியாது.....
நிலையான ஒன்று நிகழ்காலம் மட்டுமே....
****************
இதுவரை விழிகாணாத விண்மீன்மழை வான்திறந்து விழுகிறது என்னருகில்
அவள் விழிதிறந்து ஜாடை பேசுகையில்....
***************
காற்றுக்கு திசை கற்றுதரமுடியுமா?
நெளியும் அலையை நேராகநிற்க சொல்லமுடியுமா?
பெண்ணிலவு பின்னால்ஓடும் வெண்ணிலவை கட்டிவைக்கமுடியுமா?
ஆகாயதோட்டத்தில் பூத்துகிடக்கும் விண்மீன் உதிர்ந்துவிழமுடியுமா?
இவையெல்லாம் நிகழாததுபோல
என்னவளையும் மறந்துவாழ்வது நிகழாத ஒன்று....
***************
கண்ணீர்வடிக்காத மலர், மண்மடிசாய்ந்து மரணம்தேடும் போதுதான் சிரிக்கும் மலருக்கும் ஜீவன்உண்டென
புரிந்து சிலிர்த்தேன்.....
**************
பருவபதுமையே!
உன் அசைவுகளை ரசித்து பருகிய என் கவிதை,
என்றுமே உன்னை மட்டுமே பொருளாக தூக்கிசுமக்குமடி.....
***************
அலையின் சத்தம் கரையின் காதுகளுக்கு
எட்டியும்
அமைதி நிலவுவது போல
கண்களின் காதல்சத்தம்
இதயம் எட்டியும்
மௌனம் தெரிப்பது
ஏனோ....
***************
விழியில் பதிந்த உன்பிம்பம்
பார்வை முதிர்ந்தாலும் விழுவதில்லை...
***************
ஆரம்பத்தில் கண்பார்வையில் நனையவைப்பாள்
கடைசியில்
கண்ணீரில் நனையவைப்பாள்.....
***************** 
இமைகதவுகள் பூட்டபட்டபின்பு கனவாக வருவாள்
இதயகதவுகள்
பூட்டபட்டபின்பு நினைவாக
வருவாள்....
******************
மரணதுயில்களைத்த, அன்பினைபேசும்
உன்துளிகண்ணீர்கூட
எந்தன் மரணத்தையும் மறு ஜனனமாக்கும்.....
*******************
பேனா பேசுகையில் புரிகிறது உன்விரலும்
இதழென
கவிதை பேசுகையில் புரிகிறது உன்கண்ணிமையும் இதழென
காற்றோடு பேசுகையில் புரிகிறது உன்கருங்கூந்தலும்
இதழென
புன்னகை பேசுகையில் புரிகிறது உன்உதடுதான் உண்மையான இதழென இத்தனை இதழ் உன்னிடம் இருந்தும் என்காதலை எதுவுமே பேசாததுஏனோ..
*******************
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment