13 November 2013

இமைக் கதவுகளை தட்டும் நேரம்

இமைகள் கைகோர்க்கும் நேரம் இரவு....
விழிகள் விரியும்
நேரம் விடியல்....
கனவுகள்
இமைக்கதவுகளை தட்டும்நேரம் இரவு....
கதிரவனின் கைகள் இமைக்கதவுகளை
தட்டும்நேரம் காலை....
கதிரவன் கண்கள்மூடி
மேற்கில் உறங்கசெல்லும் பொழுது மாலை....
நிலவு விழிபூட்டி மேகத்தினுள் உறங்கசொல்லும்
பொழுது காலை....
************
காற்றின் கைகளை கைபற்றிவைத்தாலும் விழிநழுவி விடைபெறும் எதிர்பாராத நொடியில் என்னைவிட்டு பெண்காற்றே உன்னை போல....
***************
மோதாமல் அலைவந்து கரையை பார்த்தால் அலையின் காதலை கரை அறியுமா?.....
உதடுகள்தாண்டி உரைக்கப்படும் அன்புமட்டுமே
பார்வையை உரசும்....
உள்ளம்தாண்டாமல் புதைக்கப்படும் அன்பு பார்வையில் புலப்படுவதில்லை....
******************
பெண்ணே! உன் விழிமூடாமல் பேசிய வார்த்தைகளால், முடிவிலியாய் பேசுகிறாய் என்னோடு......
***************
மண்பார்த்து மழைதூரவரும் மேகம் காற்றுபட்டு களைவதுபோல,
பெண்பார்த்து
காதல்சொல்லவரும் மனம்
அவள் கண்களைபார்த்ததும் களைவது ஏனோ....
*****************
அதிகம் விரும்புவதை விட்டுகொடுக்க நினைக்காதே....
விட்டுகொடுக்க நினைப்பதை அதிகமாக விரும்பாதே....
******************
கனியின் கண்படாமல் மண்ணுள் மறைந்து வாழ்வது வேரின் வாழ்க்கை...
உயிர்தந்த வேரின் முகம் பாராமல் உதிர்வது மலரின் வாழ்க்கை...
ஒரே மரத்தின்,
பாதத்தில் விரிந்த வேருக்கும்,உச்சிமேல் பூத்த மலருக்கும் வாழ்வியல் வேறுபாடு ஆச்சரியக்குறியிடுகிறது அனைத்து உள்ளத்திலும்...
***************
இமைகள் பிரியா கண்கள் வெளிச்சம் அறிவதில்லை
சிறகுகள் பிரியா பறவை உயரம் அறிவதில்லை
தனித்து வாழும் உறவுகள் ஏமாற்றம் அறிவதில்லை
தனித்து இயங்கு
துணை தேடாதே......
***************
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment