13 November 2013

மண்காகிதத்தில்

அலையிடம் நடனம் பயில்வோம்
காற்றிடம் கதை பயில்வோம்
மழலையிடம் சிரிக்க பயில்வோம்
மெழுகிடம் தியாகம்
பயில்வோம்
பறவைசிறகிடம் உயரம்
பயில்வோம்
கிளியிடம் பேச
பயில்வோம்
மழைத்துளியிடம் விளையாட பயில்வோம்
அன்னையிடம் அன்பை பயில்வோம்
வானவில்லிடம் வளைந்துகொடுக்க பயில்வோம்
இயற்கையிடம் கல்வி
பயில்வோம்.....
*******
கர்வம் கற்றுதரும் வெற்றியைவிட
காயங்கள் கற்றுதரும்
தோல்வி சிறந்தது....
********
என் வாழ்விற்கு திருப்பம் வரஆரம்பித்ததே நீ என்னை திரும்பிபார்த்த நாள்முதல் தான்........
விடியல்கண்ட பகல் இரவாய் ஆனதும் அன்றுதான்........
*********
என்பேனா கவிதை பெண்ணே உனக்காக பேசும்நேரத்தில் மட்டும்
கற்பனையை கழற்றி வைத்துவிட்டு உண்மையை
பேசுகின்றன...
*********
நடைபயின்ற வாழ்நாட்கள்
நீ என்னுள் நுழைந்த நொடிமுதல்,
வேகத்தோடு
ஓடி கரைகின்றன......
**********
விடுமுறை இல்லாத உன்நினைவுகள் விடுவதில்லை என்னை....
********
பிரியநினைக்கும் உன்னிடம்
பிரியமாக இருக்கநினைக்கிறது இதயம்.......
*********
எதற்காகவும் கண்ணீர்சிந்தாத
மலராவோம்.....
எல்லோரையும்
நேசிக்கும்
காற்றாவோம்....
எப்போதும்
துன்பத்தில் தூங்காத மெழுகாவோம்....
**********
மழைத்துளியின் காலடிபட்டு காற்றோடுகலந்துவரும் மண்ணின்வாசனை போல் எந்த மலரும் வாசனைவரம் வாங்கிவரவில்லை.....
***********
தரையில் தவழும் மழைத்துளி மண்காகிதத்தில்
கவிதை எழுதுகிறது....
கம்பிகளில் கோர்த்துநிற்கும் தரைவிழாத மழைத்துளி மனகாகிதத்தில்
கவிதை எழுதுகிறது....
***********
என் கனவுச்சாலைமீது உன்பாதம் பட்டபோது பதறிஎழுந்தேன் பாதிகனவில் பயங்கர கனவென்று......
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment