13 November 2013

பேனாஇல்லா கவிஞன்

நீர் பட்டால்
அணையும்
எரியும் நெருப்பு....
பெண்பூவே நீ பட்டுபோனாலும் அணையாது உன்னால் எரியும் நினைப்பு...
*********
அலையிடம் நடனம் பயில்வோம்
காற்றிடம் கதை பயில்வோம்
மழலையிடம் சிரிக்க பயில்வோம்
மெழுகிடம் தியாகம்
பயில்வோம்
பறவைசிறகிடம் உயரம்
பயில்வோம்
கிளியிடம் பேச
பயில்வோம்
மழைத்துளியிடம் விளையாட பயில்வோம்
அன்னையிடம் அன்பை பயில்வோம்
வானவில்லிடம் வளைந்துகொடுக்க பயில்வோம்
இயற்கையிடம் கல்வி
பயில்வோம்.....
*********
கால்கள்இல்லாதபோதும் வட்டவடிவில் விழாமல் நிற்கும்வான்நிலா,
புள்ளிவடிவில் பூத்துகிடக்கும்விண்மீன்,
அலைகோடுவடிவில் அழகானமின்னல்,
அரைவட்டவடிவில் வண்ணங்களின் வரைபடம் வரையும் வானவில்,
நேர்கோடுவடிவில் நெளியாமல் மண்தொடும் மழைத்துளி.......
வடிவங்களும்,
வண்ணங்களும் படித்தேன் வானிடம்.......
********
என் வாழ்விற்கு திருப்பம் வரஆரம்பித்ததே நீ என்னை திரும்பிபார்த்த நாள்முதல் தான்........
விடியல்கண்ட பகல் இரவாய் ஆனதும் அன்றுதான்....
********
கர்வம் கற்றுதரும் வெற்றியைவிட
காயங்கள் கற்றுதரும்
தோல்வி சிறந்தது....
*********
என்பேனா கவிதை பெண்ணே உனக்காக பேசும்நேரத்தில் மட்டும்
கற்பனையை கழற்றி வைத்துவிட்டு உண்மையை
பேசுகின்றன...
*********
இதயக்கண்ணாடியில் என்னுயிர் உடைந்துபோனாலும் உனது பிம்பம்மட்டும் உடைவதும் இல்லை உதிர்வதும் இல்லை பிரிவதும் இல்லை......
**********
கண்இமைகளின் திறப்புவிழா விடியல்...
கதிரவன் விழிதிறக்கும்விழா விடியல்...
இரவுபோர்வைக்குள் ஒளிபுகும்விழா
விடியல்...
***********
மாலையில் கசியும்
மேகம்
மின்னலில் கண்ணடிக்கும் வானம்
இடியில் கர்ஜிக்கும் ஆகாயம்
இரவில் காலில்லாமல் ஊர்வலம்வரும் நிலவுதேவதை
தூரலில் கவிதைவடிக்கும்
பேனாஇல்லா கவிஞன்....
***********
அவளது மடிக்குள் மடங்கும் மழலையாக மலர்ந்தபோது துன்பங்களை காணவில்லை...
அவளது உயரம்தாண்டி பூத்துநிற்கும்போது இன்பங்களை காணவில்லை...
*********
முகத்தை பார்வையிட்டபின் வருவது காதல்
இதயத்தை
பார்வையிட்டபின் வருவது நட்பு
முகமும்,அகமும் பாராமல்
படர்வது
அன்னையின் அன்பு மட்டுமே....
*********
தலைகோதும் விரல்கள்,
அன்பைவெளிப்படுத்தும் முத்தங்கள்,
எட்டிஉதைத்தும் சிரிக்கும் இதழ்கள்,
தொட்டில் இல்லாமல் உறங்கும்
மடியின் தாலாட்டுகள்,
இரவிலும் அரவணைக்கும் கரங்கள்,
வலியை சொல்லதெரியாமல் வலியால்துடிக்கும்போது கண்ணீர்கசியும் இதயம்...
---------------------
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment